உலகக் கோப்பை தொடரில் அடுத்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இதில் இரு அணிகளும் நீல ஜெர்ஸி பயன்படுத்த கூடாது என்ற விதியினால் இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடுகிறது.

Advertisment

kohli about dhoni bating and team india's form

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம் தோனியின் ஆட்டதிறன் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எப்போதுமே ஒரு விஷயத்தை சொல்லிதான் அவருக்கு தெரிய வைக்க வேண்டும் என்று இல்லை. ஒரு கிரிக்கெட்டராக அவருக்கு எல்லாம் தெரியும். அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வெளியில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன, ஆனால் எங்களது அணிக்குள் நடப்பது என்ன என்பதே எங்களுக்கு மிக முக்கியமான விஷயம். அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் பல முறை அணிக்காக மிக முக்கியமான இடங்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு கூட அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது.

Advertisment

ஆனால் அதை விட்டுவிட்டு அவர் சரியாக ஆடாத இன்று, இரண்டு ஆட்டங்களை வைத்து மட்டும் பேசுவது தவறு. அப்படி யாரவது பேசினாலும் அதனை நாங்கள் பெரிய விஷயமாக பார்க்கவில்லை. கடைசி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அவர் இந்திய அணியை ஒரு நல்ல இலக்கை நோக்கி அழைத்து சென்றார்" என கூறினார்.