Advertisment

விராட் கோலி, டிவில்லியர்ஸை தடை செய்ய வேண்டும் - கே.எல்.ராகுல் கிண்டல்!

kl rahul

Advertisment

ஐபிஎல் தொடர்களில் இருந்து விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை தடை செய்ய வேண்டும் எனத் தான் விரும்புவதாக கே.எல்.ராகுல் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த தொடர்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்த பெங்களூரு அணி நடப்புத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 வெற்றிகள், 2 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலியும், பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலும் சமூக வலைத்தள பக்கம் வாயிலாக கலந்துரையாடினர். அப்போது விராட் கோலி, பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் ஐபிஎல் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் எந்த விதியை மாற்ற வேண்டும் என விரும்புகிறீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கே.எல்.ராகுல், "ஐபிஎல் நிர்வாகம் உங்களையும், டிவில்லியர்ஸையும் அடுத்த வருடம் தடை செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு ரன்கள் எடுத்த பிறகு, போதும் என மக்களே சொல்ல வேண்டும். நீங்கள் 5000 ரன்கள் எடுத்துவிட்டால் போதும், அதன்பின் மற்றவர்களை விளையாட விடுங்கள்" என நகைச்சுவையாகக் கூறினார்.

Advertisment

பின்னர் பேசிய விராட் கோலி, வைய்டு மற்றும் நோ-பால் விவகாரங்களில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் வகையில் விதிகள் மாற்றப்பட வேண்டும் எனத் தான் விரும்புவதாகக் கூறினார்.

IPL KL Rahul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe