Advertisment

நியூசிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடர்: கேப்டனாகும் கே.எல். ராகுல்?

team india

இந்திய ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பொறுப்பை வகித்துவரும் விராட் கோலி, நடைபெற்றுவரும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார். இதனையடுத்து, இந்திய 20 ஓவர் அணியின்அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

அதேபோல் 20 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது, ரோகித் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனவும்எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், நியூசிலாந்து தொடரின்போது மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், அதில் ரோகித் சர்மாவுக்கும் ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதால், நியூசிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் தொடரின்போது இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா - நியூசிலாந்து தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

team india KL Rahul virat kohli Rohit sharma
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe