Advertisment

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; கே.எல் ராகுல் விலகல் - அதிரடி ஆட்டக்காரர் சேர்ப்பு!

kl rahul

Advertisment

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயானஇருபது ஓவர் தொடரின்அனைத்து ஆட்டங்களையும்இந்தியா வென்ற நிலையில், அடுத்ததாக இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விராட் கோலிக்கு முதலாவது டெஸ்டில்இருந்து மட்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் மஸ்க்கில் ஸ்ட்ரைன் (muscle strain) காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து கே.எல் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (25.11.21) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

surya kumar yadav INDIA VS NEW ZEALAND MATCH KL Rahul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe