Advertisment

"மூத்த வீரருக்கான பொறுப்பை உணர்ந்து அவர் செயல்படுகிறார்" - கே.எல்.ராகுல் பாராட்டு!

Mohammed Shami

ஷமி மூத்த வீரருக்கான பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து, நடப்புத் தொடரில் சிறப்பாகச் செயல்படுகிறார் என பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisment

13-வது ஐபிஎல் தொடர்அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரரான கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியை வழிநடத்தி வருகிறார். 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 4 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. தொடரின் தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்துவந்த பஞ்சாப் அணி, கடந்த 3 போட்டிகளில் தொடர் வெற்றிபெற்று அதிரடிஎழுச்சி பெற்றுள்ளது. இவ்வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஷமியின் ஆட்டம் குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "ஷமி என்ன வகையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒரு சீனியர் வீரராக என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து, கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரால்இன்னும் கூடுதலான விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

பஞ்சாப் அணி விளையாடிய 10 போட்டிகளிலும் களமிறங்கியுள்ள ஷமி, அந்த அணிக்காக இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Mohammed shami
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe