Advertisment

"எங்களைப் போன்றவர்களுக்கு தோனி தான் ஹீரோ..." கே.எல்.ராகுல் பேச்சு!!!

kl rahul

Advertisment

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக சில நாட்களுக்கு முன்னால் அறிவித்தார். அதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரரும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் தோனி குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில் அவர், "தோனியின் ஓய்வு முடிவு இந்தியா மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்திற்குமே உணர்வுப்பூர்வமான ஒரு தருணமாக இருந்தது. நாங்கள் அனைவருமே சிறுவயதில் தோனியை போல ஆகவேண்டுமென்று நினைத்து அவரது ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவர்கள். என்னைப் போல நாட்டின் சிறிய நகரங்களில் இருந்து வருபவர்களுக்கு தோனி தான் ஹீரோ. நாங்கள் எப்போதும் 'நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. முயற்சி செய்தால் நாமும் சாதிக்க முடியும்' என சொல்லிக்கொள்வோம். அவரிடம் சொல்வதற்கு என்னிடம் போதிய வார்த்தைகள் இல்லை. நேரில் அவரைப் பார்க்கும் போது கட்டியணைத்து கொள்வேன்" என்றார்.

Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe