Advertisment

பெங்களூர் அணி தயக்கம் - ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு?

kkr - rcb

Advertisment

இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்துள்ளது. அதேவேளையில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வீரர்களுக்கு கரோனாதொற்று ஏற்படாமல் இருக்க, அவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய கரோனாபாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெளியே எங்கும் செல்ல ஐபிஎல்லில் விளையாடும்வீரர்களுக்கு அனுமதியில்லை.

இந்தநிலையில், ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருந்தன. இதனிடையே,கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் இருவருக்கும் கரோனா உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா அணியின் இரண்டு வீரர்களுக்கு கரோனா உறுதியாகியிருப்பது, பெங்களூர் அணியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விளையாட தயங்குவதால் இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ipl 2021 corona virus kolkata knight riders bangalore royal challengers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe