Advertisment

"எந்த ஒரு பாகுபாடும் சகித்துக்கொள்ளப்படாது" - கே. கே.ஆர் அறிவிப்பு; சிக்கலில் மோர்கன்- மெக்கல்லம்!

mccullum and morgan

நியூசிலாந்து இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காகஒல்லி ராபின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமானதோடு, சிறப்பாகவும் பந்து வீசினார். அதேநேரத்தில், அவர் கடந்த 2012-13 ஆண்டுகளில் பதிவிட்டிருந்த இனவெறியைத் தூண்டும் வகையிலானட்வீட்களும், பாலியல் ரீதியான ட்வீட்களும் வெளிச்சத்திற்கு வந்தன.இது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்துதனது ட்வீட்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரைசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

Advertisment

அதனைதொடர்ந்து, மேலும் சில இங்கிலாந்து வீரர்களின்சர்ச்சைக்குரிய ட்விட்டர்பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்தவரிசையில்,ஜோஸ் பட்லர், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், முன்னாள் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் ஆகியோரின் சில ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. அந்தக் குறிப்பிட்ட ட்விட்டர் பதிவுகள், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதைக் கேலி செய்வது போல் இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து பட்லர், மோர்கன் ஆகியோரது ட்வீட் குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இயான் மோர்கன் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். மெக்கல்லம் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதனையடுத்து இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சை தொடர்பாக கொல்கத்தா அணி விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாகஅந்த அணியின் தலைமை செயல் அதிகாரி, "இந்த நேரத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்குமளவுக்கு எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அனைத்து உண்மைகளும் வெளிவரும்வரை காத்திருப்போம்.நைட் ரைடர்ஸ் அமைப்பில் எந்தவொரு பாகுபாட்டையும் சகித்துக்கொள்ளாது" என தெரிவித்துள்ளார். இதனால் மோர்கன் மற்றும்மெக்கல்லம் இந்திய ரசிகர்களை கேலி செய்தது நிரூபணமானால், அவர்கள் இருவர் மீதும் கொல்கத்தா அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கருதப்படுகிறது. இது மோர்கன் மற்றும் மெக்கலத்திற்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

twitter Eoin Morgan Mecullum KKR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe