2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகளும் தங்களிடம் உள்ள தொகையை கொண்டு மொத்தம் 73 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் முன்னணி வீரர்களுக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தமிழகத்தின் இளம் வீரர் வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வருண் தற்போது 4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.