Skip to main content

4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன இளம் தமிழக வீரர்...

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

 

kkr bought varun chakravarthy in ipl 2020 auction

 

 

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகளும் தங்களிடம் உள்ள தொகையை கொண்டு மொத்தம் 73 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் முன்னணி வீரர்களுக்கு  கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தமிழகத்தின் இளம் வீரர் வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.  கடந்த ஆண்டு பஞ்சாப் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வருண் தற்போது 4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

 

Next Story

ரஜினியை சந்தித்த கொல்கத்தா அணி வீரர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

.

cricketers venkatesh and varun meets rajinikanth

 

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வழக்கம் போல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்போது வரை புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்து குஜராத் அணி முதல் இடத்திலும் 15 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை அணியும் நான்காவது இடத்தில் 13 புள்ளிகளுடன் லக்னோ அணியும் உள்ளது.  

 

இந்த நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளனர். இருவரும் ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் தங்களது சமூக வலைத்தளத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரஜினி பற்றி கூறியுள்ளனர்.

 

வெங்கடேஷ் ஐயர் பதிவிட்டிருப்பதாவது, "தலைவர் தரிசனம். இன்றைய நாள் என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது. சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்த்தை ஒருவழியாகச் சந்தித்தேன். என்ன ஒரு அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்" என பதிவிட்டுள்ளார். 

 

வருண் சக்கரவர்த்தி பதிவிட்டதாவது, "இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது தான் நடக்கும். அது நடந்தது.அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன். லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் (LIVING WITH HIMALAYAN MASTERS) என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.