Advertisment

பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

Ravi

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 11ஆவது சீசன் வரும் ஏப்ரல் மாதம் முதல்தொடங்க இருக்கிறது. இதில் எந்தெந்த அணியை யார்யார் வழிநடத்துவார் என்ற அறிவிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் அணியை தலைமை தாங்குவார் என்ற அறிவிப்பை முகநூல் வீடியோ மூலம் அந்த அணியின் ஆலோசகர் விரேந்தர் சேவாக் வெளியிட்டுள்ளார்.

Advertisment

அணியின் தலைமைக்கான தேர்வில் யுவ்ராஜ் சிங்கின் பெயர்தான் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விரேந்தர் சேவாக்கின் உந்துதல் மற்றும் சிலரின் ஆலோசனைகளின் படி அஸ்வின் கேப்டன் பதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அவரது எக்கானமி 6.5 ரன்கள் மற்றும் சராசரி 25. இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்காத நிலையில், பஞ்சாப் அணி ரூ.7.6கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

cricket CSK Dhoni IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe