Advertisment

மலிங்காவின் இடம் நிரப்பப் பட்டுவிட்டது  - பொல்லார்ட் பேச்சு!

Kieron Pollard

மலிங்காவின் இடம் பும்ராவால் நிரப்பப்பட்டுவிட்டது என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

Advertisment

13-வது ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி,20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுக்க, போட்டி சமநிலையில் முடிந்தது.

Advertisment

பின் வெற்றியைத் தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 6 வெற்றிகள், 3 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

போட்டிக்குப் பின் மும்பை அணி வீரர் பொல்லார்ட் பேசுகையில், "பும்ரா உலகத்தரமான கிரிக்கெட் வீரர். ஒன்றுக்கும் மேற்பட்ட வகை போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மும்பை அணியில் அவரோடு நல்ல இணக்கம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மலிங்கா நல்ல உடற்தகுதியுடன் முழு வீச்சில் இருந்தார். தற்போது அவரது இடத்தை பும்ரா நிரப்பிவிட்டார்" என்றார்.

மும்பை அணி வீரரான மலிங்கா தன்னுடைய சொந்தக் காரணங்களுக்காக நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

lasith malinga Mumbai Indians
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe