Advertisment

சுனில் நரேனை கடுமையாக விமர்சித்த பீட்டர்சன்!

Sunil Narine

Advertisment

கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் மீது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கடந்த போட்டியில், பந்தை எறிவதாக எழுந்த சர்ச்சையையடுத்து சுனில் நரேனுக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுனில் நரேன் ஆடும் அணியில் இடம் பிடிக்காதது அணிக்கு பெரிய இழப்பு என கொல்கத்தா அணி ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சுனில் நரேன் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில் அவர், "சுனில் நரேன் இடம் பெறாதது அணிக்கு பெரிய இழப்பு இல்லை. அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அது அணிக்கும் நல்லதல்ல. ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவர் கடந்த மூன்று வருடங்களில் பந்தை நன்றாகசுழலச் செய்யவில்லை" எனக் கூறினார்.

KKR IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe