Skip to main content

சிக்ஸர் அடித்து தன் கார் கண்ணாடியை தானே உடைத்த கிரிக்கெட் வீரர்...!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

kevin o brien

 

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கெவின் ஓ பிரையன் அடித்த சிக்ஸர் அவர் கார் கண்ணாடியையே உடைத்துள்ளது. அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. ஒரு உள்ளூர் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் கெவின் ஓ பிரையன் 37 பந்துகளில் அதிரடியாக விளையாடி  எட்டு சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்துள்ளார். அந்த எட்டு சிக்ஸரில் அவர் அடித்த ஒரு இமாலய சிக்ஸர் மைதானத்தின் கார் நிறுத்தம் செய்யும் இடத்தில் இருந்த அவர் கார் கண்ணாடியை உடைத்துள்ளது.

 

இச்செய்தியை அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.  

 

 

Next Story

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்படுங்கள் - சஞ்சு சாம்சனுக்கு வந்த அழைப்பு

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

'Captain the Irish Cricket Team' - Call to Sanju Samson

 

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2015ம் ஆண்டிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். ஆனால் கடந்த 7 ஆண்டுகாளாக 16 டி20 போட்டிகளிலும் 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சனுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பினை மறுத்து வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அயர்லாந்து நாட்டின் குடியுரிமை, கார், வீட்டு வசதி இந்திய கிரிக்கெட் நிவாகம் வழங்கும் சம்பளத்திற்கு நிகராண ஊதியம் என அனைத்தையும் வழங்கி தங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்துள்ளது.

 

மேலும் அயர்லாந்தின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் சஞ்சு சாம்சன் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

 

அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தும் சஞ்சு சாம்சன் அதை நிராகரித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


 

Next Story

வாட்ஸ்அப்பிற்கு 1900 கோடி அபராதம் விதித்த நாடு!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

whatsapp

 

அயர்லாந்து நாடு, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 900 கோடியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு தனியுரிமை விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு பேஸ்புக்கோடு அந்த தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்குத் தெரிவிக்க தவறியதால் வாட்ஸ்அப்பிற்கு இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அயர்லாந்தின் தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.