Skip to main content

சி.எஸ்.கே அணி வீரர் கேதார் ஜாதவ் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகமே...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

இந்த மாத இறுதியில் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் பிசிசிஐ -யால் அறிவிக்கப்பட்டது.

 

kedar jadhav mar ruled out of indian worldcup squad due to injury

 

 

இதில் தோனி, கேதார் ஜாதவ், ஜடேஜா என மூன்று சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில் கேதார் ஜாதாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த ஜாதவ் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில் அவருக்கு நாளை எக்ஸ்-ரே எடுக்கப்பட உள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் தரும் அறிக்கையை வைத்தே ஜாதவ் உலகக்கோப்பையில் விளையாடுவாரா, இல்லையா என தெரிய வரும்.

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், சிறந்த பகுதிநேர பந்துவீச்சாளருமான இவர் உலகக்கோப்பையில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவே இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பையில் ஜாதவ் விளையாடுவர் இல்லையா என்பது நாளை அவரது மருத்துவ பரிசோதனை முடிந்ததே தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

Next Story

“எல்லோரும் சேர்ந்து அவதூறு பேசுவது சரியா?”- கேதாருக்கு ஆதரவு தந்த பாடலாசிரியர்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
kedar jadhav

 

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்வரிசையில் களமிறங்கிய கேதார் ஜாதவ் அதிரடியாக விளையாடாமல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சென்னை அணி ரசிகர்களால் கருதப்படுகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் கேதாரை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வைரலாகின.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவ், 4 இன்னிங்ஸில் களமிறங்கி 59 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 58 ரன்கள் ஆகும். 

 

இதனையடுத்து, கேதார் ஜாதவை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பாடலாசிரியர் விவேக் கேதாருக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் நாம் தெரிவிக்கும் கருத்துகள் மற்றவர்களின் கருத்துகளோடு தீவிரமாகக் கலந்து அப்படியே ஒரு நிலச்சரிவைப் போன்ற தாக்கத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டாமா?

 

ஒருவர் மீது ஒரு கிலோ எடையுள்ள கல்லை வைத்தால் பரவாயில்லை, ஆனால் அதேபோல 100 கற்களை அவர் மீது வைத்துவிட்டு அதன்பின் மீண்டும் 1 கிலோ கல்லை வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

 

எனக்கும் ஜாதவ் ஆடிய விதம் பிடிக்கவில்லை. அதுவும் 5 பந்துகளில் 26 ரன்கள் தேவை எனும் போது ஒரு ரன் கூட அவர் எடுக்கவில்லை. ஆனால், அவரது இந்த அணுகுமுறை அவர் மனதிலிருந்த அழுத்தத்தினால் இருக்கலாம். அவர் ஊக்கம் குறைந்திருக்கலாம்.

 

ஆம். ஒரு விளையாட்டு வீரர் இதைக் கையாள வேண்டும். அதோடு எதிர்த்துப் போராட வேண்டும். அவர் தன்னிலைக்கு வரும் வரை உட்கார வைக்கப்பட்டு, இன்னொரு நல்ல திறமையைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

ஆனால், எல்லோரும் சேர்ந்து அவர் மீது அவதூறு பேசுவது சரியா? ஜாதவுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் ஆறுதல்கள். அவர்கள் நன்றாக ஆடும்போது கொண்டாடுவது மட்டுமல்ல, மோசமான கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

 

இது நமக்கு வெறும் ஒரு ட்வீட்டாக இருக்கலாம். ஆனால், இதன் தாக்கம், அதுவும் எல்லோருடைய ட்வீட்டுகளும் சேர்ந்து தரும் தாக்கம் பலரை மொத்தமாக வீழ்த்தும். சென்னை ஐபிஎல் குடும்பத்திலிருந்து ஜாதவுக்கு என் அன்பை அனுப்ப முடிவெடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

கேதர் ஜாதவ் படைத்த வித்தியாசமான சாதனை!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

Kedar Jadhav

 

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்வரிசையில் களமிறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடாமல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சென்னை அணி ரசிகர்களால் கருதப்படுகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்தான மீம்ஸ்கள் வைரலாகின.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ், 4 இன்னிங்ஸில் களமிறங்கி 59 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 58 ரன்கள் ஆகும். அவர் எதிர்கொண்ட 59 பந்துகளில் இதுவரை ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை என்பதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது. அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் கூட அடிக்காதவர்கள் பட்டியலில் கேதர் ஜாதவ் முதலிடம் பிடித்துள்ளார். பஞ்சாப் அணியைச் சேர்ந்த மேக்ஸ்வல், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கனே வில்லியம்சன் ஆகியோரும் இந்தப்பட்டியலில் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர்.