இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு 'ஏகலைவா' விருது வழங்கி கர்நாடக அரசு கௌரவித்துள்ளது.
கர்நாடக அரசானது விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் அம்மாநில விளையாட்டு வீரர்களுக்கு 'ஏகலைவா' என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு இவ்விருதிற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தன்னை விருதிற்கு தேர்வு செய்த கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்து கே.எல்.ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், "ஏகலைவா விருதிற்கு என்னைத் தேர்வு செய்த கர்நாடக அரசிற்கு நன்றி. என்னுடைய பயிற்சியாளர்கள், குடும்பம், நண்பர்கள், சக வீரர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. நம் மாநிலம் மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்த தொடர்ந்து கடினமாக உழைப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.