2020 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்திய அணியில் தோனி இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதிலளித்துள்ளார்.

Advertisment

kapildev on dhonis inclusion in t20 worldcup

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ்விடம் டி20 உலகக் கோப்பை தொடரில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கபில்தேவ், "ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், சுமார் ஒரு ஆண்டாக எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத தோனியை, நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல. உலககோப்பைக்கு முன் தோனி அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும்" என தெரிவித்தார்.

Advertisment

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் தோனி அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.