Skip to main content

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கபில் தேவ் புகைப்படம் வெளியீடு!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

Kapil Dev

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்தியவர் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற அவர், கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணனை செய்வதில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 62 வயதான கபில் தேவுக்கு நேற்று முன்தினம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கபில் தேவ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

 

இந்நிலையில், கபில் தேவ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

 

Next Story

"கபில்தேவுடன் பணியாற்றுவது எனது பாக்கியம்" - ரஜினிகாந்த்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

rajini shared a photo with kapil dev

 

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

 

'லால் சலாம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலையில் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் நடந்த 34 நாட்கள் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் தொடர்பான பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 

 

சமீபத்தில் திருவண்ணாமலை ஷெட்யூலை முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அண்மையில் இப்படத்தின் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

 

இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ரஜினி மொய்தீன் பாய் கெட்டப்பில் இருக்கிறார். அருகில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் இருக்க அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் "முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவது எனது மரியாதை மற்றும் பாக்கியம்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

இன்று மதியம், கபில்தேவ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "இதுபோன்ற பெரிய மனிதருடன் இருப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியமாகக் கருதுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

ரஜினியுடன் இருப்பது பாக்கியம் - கபில் தேவ்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

kapil dev meets rajinikanth

 

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

 

சமீபத்தில் ரஜினிகாந்தை இந்திய அணி கிரிக்கெட் வீரர்களான குல்தீப் யாதவ், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் ரஜினியை சந்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "இது போன்ற பெரிய மனிதருடன் இருப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியமாகக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

கபில் தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது உலக கோப்பை வென்றது '83' என்ற தலைப்பில் 2021ஆம் ஆண்டு படமாக வெளியானது. அப்போது படக்குழுவினரை பாராட்டிய ரஜினி கபில் தேவையும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.