Kapil Dev

Advertisment

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முழுமையாககுணமடைந்து வீடு திரும்பியுள்ள கபில் தேவ் தன் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், சில தினங்களுக்கு முன்னால் நெஞ்சு வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் தங்கியிருந்து தொடர் சிகிச்சை பெற்று வந்த கபில் தேவ், பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது தனது உடல்நிலை குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்தகாணொளி பதிவில், "தற்போது நலமுடன் இருக்கிறேன். என் மீது அன்பு மற்றும் அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றி என்று கூறிய கபில் தேவ், உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.