Skip to main content

வாழ்த்து மழையில் 'வில்லியம்சன் - சாரா ரஹீம்' ஜோடி!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

williamson

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன். இவர் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். கேன் வில்லியம்சனின் மனைவி சாரா ரஹீம்.

 

தற்போது, 'வில்லியம்சன் - சாரா ரஹீம்' இணைக்கு, பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

பிறந்த குழந்தையைத் தன் மார்போடு அணைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அழகான பெண் குழந்தையை, எங்களது குடும்பத்திற்கு அழைக்க மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

கேன் வில்லியம்சன் தந்தையானதை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

 

  

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பச்சிளம் குழந்தையை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

baby into a well for extramarital affair

 

கோவை மாவட்டம் நெகமம் பகுதி அருகே உள்ள கிணற்றில் பிறந்து 3 நாட்கள் ஆன பெண் குழந்தையின் உடல் ஒன்று சடலமாக இருந்துள்ளது தெரியவந்தது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் பொள்ளாச்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிரேத பரிசோதனையின் அறிக்கையில் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. 

 

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த மாதவி (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது. மாதவி பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி கணவரை பிரிந்து தனது தந்தையின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, மாதவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால், மாதவி கருவுற்றிருந்தார். 

 

இந்த நிலையில், தனது மகள் மாதவி கர்ப்பமாக இருப்பது தாய் புவனேஸ்வரிக்கு (49) தெரிய வந்தது. இதையடுத்து, அவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து கருவை கலைக்க கேட்டுள்ளார். ஆனால், மாதவியை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வளர்ச்சி அடைந்துவிட்டதாகவும் கருவை கலைக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாதவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வீட்டில் வைத்து புவனேஸ்வரியும், அவரது சகோதரி அம்மணி என்பவரும் பிரசவம் பார்த்துள்ளார்கள். 

 

இதில் மாதவிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன் பின்னர், புவனேஸ்வரியும் அம்மணியும் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை கொன்ற இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தையை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Next Story

கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Kane Williamson step down as Test captain

 

நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுகிறார் என்றும் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து வில்லியம்சன் கூறியதாவது, “நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம். அதில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகப் பணிகளைக் கொண்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இந்த முடிவிற்கு இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

நியூசிலாந்து அணியின் கேப்டனாக 40 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் 22 போட்டிகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அவரது 24 டெஸ்ட் சதங்களில் 11 சதங்கள் அவர் கேப்டனாக இருந்தபோது அடித்தவை.  

 

நியூசிலாந்து அணி அடுத்து பாகிஸ்தான் உடன் விளையாட உள்ள தொடருக்கு டிம் சௌதி தலைமைத் தாங்குவார் எனவும், துணைக் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் வீரராக அணியில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.