williamson

Advertisment

2021ஆம் ஆண்டின்உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நாளை (17.11.2021) தொடங்குகிறது. முதலில் 3 இருபது ஓவர் போட்டிகளில் சந்திக்கும் இரு அணிகளும், அதனைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்காக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். இதனையடுத்துஅந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்டிம் சவுத்தி, இருபது ஓவர் தொடரில் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் போட்டி, நாளை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.