டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாகப் பங்கேற்றவர்களில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64-69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பி.வி சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.
மேலும், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர், ஆறாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.