உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் தொடங்கி நடந்துவரும் நிலையில், இந்திய கேப்டன் கோலி குறித்து தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

kagiiso rabada about virat kohli

இது குறித்து அவர் அந்த பேட்டியில் கூறுகையில், "ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் மோதிய ஆட்டத்தில் எனது பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டு கோலி என் மீது மோதி விட்டு ஒரு வார்த்தையை கூறினார். ஆனால் அதே வார்த்தையை நான் திருப்பிக் கூறும்போது, அவர் கோபமடைந்து விட்டார். இது அவரை ஒரு முதிர்ச்சியற்றவராகவே காட்டுகிறது. கோலி களத்தில் விளையாடும்பொழுது மற்றவர்களிடம் கோபப்படுவார். ஆனால் எதிரே உள்ள நபர் பதிலுக்கு கோபப்பட்டால் அதனை கோலியால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அவரது இந்த கோபம்தான் அவரை சிறந்த வீரராகஉருவாக்கியுள்ளது என நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். கோலியை முதிர்ச்சியில்லாதவர் என கூறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.