Skip to main content

அஸ்வின் செய்தது சரியா? தவறா? கொந்தளிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்...

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அதுவும் பஞ்சாப் அணியின் கேப்டன் என்கிற அந்தஸ்துடன் நேற்று இரவு மொஹாலியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடினார். 
 

aswin

 

 

பட்லர், 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் மன்கட் செய்து பட்லரை அவுட்டாக்கினார். எந்தவித வார்னிங்கும் இன்றி மன்கட் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று இரவிலிருந்து மன்கட் செய்தது குறித்து பலர் அஸ்வினை விமர்சித்தும், சப்போர்ட் செய்தும் வருகின்றனர். முதலில் மன்கட் என்பது தெருவில் விளையாடும் கிரிக்கெட்டில் இருந்தே பலருக்கு பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும். ஏனென்றால் அவுட்டாக்க முடியாத பேட்ஸ்மேனை அவ்வாறு அவுட்டாக்கி வெளியேற்றுவது கல்லி கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். அதிலும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை மன்கட் முறையை பயன்படுத்தியவர்கள் பின்னர் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என்றெல்லாம் சொல்லி அதை தவிர்த்துவிடுவார்கள்.
 

மன்கட் அவுட்டின் வரலாற்றை தெரிந்துகொள்வோம். 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில்தான் இந்த முறையில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அந்த ரன்னவுட்டை செய்த பவுலரின் பெயர் வினோ மன்கட். இந்த விக்கெட் முறையை அப்போதும் பலர் விமர்சித்தார்கள். ஆஸ்திரேலிய ஊடகங்கள் மிக கடுமையாகவே விமர்சித்தது. மன்கட் என்பவர் இந்த ரன்னவுட்டை செய்ததால் இந்த விக்கெட் முறைக்கு மன்கட் அவுட் என்றே அழைக்கப்படுகிறது. பௌலர் தனது பந்து வீசும் ஆக்சனைச் செய்து  நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே சென்றவுடன் , பௌலர் அவரை அவுட் செய்து கொள்ளலாம். அப்படி பௌலர் சரியாக அவுட் செய்துவிட்டால், இந்தப் பந்து அந்த ஓவரின் ஒரு பந்தாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக பௌலர் அவுட் செய்யவில்லை என்றால் இந்தப் பந்து டெட் பாலாக அறிவிக்கப்படும்.  
 

mankad

 

 

இந்த மன்கட் முறையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்று சொல்லப்படும் கபில் தேவும் செய்திருக்கிறார். பல வீரர்கள் இந்த முறையில் அவுட் செய்திருக்கிறார்கள். தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள அஸ்வினே ஒரு முறை சிபி சீரிஸில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில், திரிமன்னேவை அவுட் செய்தார். இந்திய அணியின் மூத்த வீரர்களின் அறிவுறுத்தலின் பேரில் வாபஸ் பெறப்பட்டது. இவ்வளவு ஏன் , நேற்று அவுட்டாகிய ஜோஸ் பட்லரும் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மன்கட் முறையில் அவுட் ஆக்கப்பட்டுள்ளார்.  சசித்ர செனநய என்ற பௌலரால் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டார். அப்போது இந்தத் தொடரின் போது ஜாஸ் பட்லர் அவுட் செய்வதற்கு முன் பல முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இங்கிலாந்து வீரர்கள் இதனை நேர்மையான முறையல்ல என்றனர். இன்றும் இந்த ரன்னவுட் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அதேபோல சர்ச்சைகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 
 

சமூக வலைதளங்களில், அஸ்வின் பந்து வீச வரும்போது பட்லர் கிரீஸ் லைனுக்குள்தான் நிற்கிறார். அவர் வெளியே செல்லும் வரை அஸ்வின் வெயிட் செய்து மன்கட் செய்துள்ளார் என்று விமர்சிக்கின்றனர். ஆனால், 2017ஆம் ஆண்டின் கிரிக்கெட் விதியை புதுப்பத்திலின்படி பார்த்தால் இது சரியான அவுட்டே. நான் ஸ்டைரைக்கரில் நிற்கும் வீரர் பவுலர் பந்து வீசிய பின்னே கிரீஸ் லைனை விட்டு வெளியேற வேண்டும். பந்து வீசுவதற்கு முன்பு கிரீஸ் லைனை விட்டு வெளியேறினால் பவுலர் ஸ்டம்பில் அடித்து ரன்னவுட்டாக்கலாம் என்று விதி மாற்றப்பட்டுவிட்டது. ஆகையால் இது ஐசிசி விதியில் இருக்கிறது என்று அஸ்வினை விமர்சிப்பவர்களை இப்படி விமர்சிக்கிறார்கள். எது என்னவோ அஸ்வின் செய்தது சரியா, தவறா என்பதை தாண்டி நேற்றைய ஆட்டத்தில் அந்த விக்கெட்தான் போட்டியையே மாற்றியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல் முறை மன்கட். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஐசிசி விதியின் படி இது சரியான ஒன்று. ஜெண்டில்மேன் கிரிக்கெடின் படி இது... ?

 

 

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.

Next Story

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் - வெற்றியின் ரகசியம் குறித்து பட்லர்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
The mind is a powerful thing - Butler says on the secret of success

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என தனது ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 19ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளசிஸ், கோலி இணை சிறப்பான ஆடினர். மிகவும் சிறப்பாக ஆடிய கோலி ஐபிஎல்-இல் தனது 8ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 ரன்கள் குவித்தார். 

பின்னர், 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் சாம்சன், பட்லர் இணை அட்டகாசமாய் ஆடியது. சாம்சன் அரை சதம் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி வரை களத்தில் நின்ற பட்லர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இறுதியில் அணி வெற்றி பெற 1 ரன்னும், பட்லர் சதம் அடிக்க 6 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்து சதம் கடந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். இதன் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கடந்த சில ஆட்டங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பட்லர், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதம் கடந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அப்போது பேசிய பட்லர் “இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது, கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அதையெல்லாம் தாண்டி தற்போது பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு காலம் விளையாடியிருந்தாலும், அந்த ஆட்டத்தில் கவலைகள் மற்றும் அழுத்தங்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதைப் போக்க மனம்தான் ஒரு சக்திவாய்ந்த விஷயம், மனதைத் தோண்டிக்கொண்டே இருங்கள், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். அதோடு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாகிவிடும், சில சமயங்களில் அது சரியாகிவிடும் என்று நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும். நான் கடந்த ஆட்டத்தில் 13 ரன்களைப் பெற்றிருந்தாலும், மிகவும் நன்றாக உணர்ந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் சிறப்பாக ஆடியிருந்தேன், அதைப் போல் ஆட எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவை என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நாங்கள் இந்த சீசனை நன்றாகத் தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக இணைந்து ஆடி வருகிறோம், எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து கடினமாக உழைத்து இதே மாதிரியான சிறப்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.