Advertisment

"அவர் பல பரிமாணமுடையவர்" - இந்திய வீரரைப் புகழ்ந்து தள்ளிய ஜாண்டி ரோட்ஸ்!

Jonty Rhodes

கே.எல்.ராகுல் பல பரிமாணமுடையவர் என ஃபீல்டிங் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisment

இந்திய வீரரான கே.எல்.ராகுல், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தி வருகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல்.ராகுல், 10 போட்டிகளில் களமிறங்கி 540 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பியும் கே.எல்.ராகுல் வசமுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜாண்டி ரோட்ஸ் கே.எல்.ராகுல் ஆட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "கே.எல்.ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பல பரிமாணங்களை உடையவர். கிரிக்கெட் வீரராக பல சூழலுக்குப் பொருந்திப் போக வேண்டும். எந்தவொரு வீரர் அதில் பொருந்திப் போகிறாரோ அவரே வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக வலம் வருவார்" எனக் கூறினார்.

ipl 2020 KL Rahul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe