Advertisment

வார்னருக்கு அச்சுறுத்தலாக மாறும் ஆர்ச்சர்! 

Jofra Archer

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான வார்னருக்கு, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அச்சுறுத்தல் தரக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார்.

Advertisment

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியை வழிநடத்தி வருகிறார். இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நேற்றைய போட்டியில், ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் விக்கெட்டினை ஆர்ச்சர் வீழ்த்தினார்.

Advertisment

அதிரடியாக விளையாடி ரன் குவிக்கக் கூடியவரான டேவிட் வார்னர், ஆர்ச்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறார். சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில், கடைசியாக 7 முறை ஆர்ச்சரின்பந்துவீச்சை எதிர்கொண்டதில், 6 முறை அவரிடம் தன் விக்கெட்டினை வார்னர் பறிகொடுத்துள்ளார். ஆர்ச்சர் மற்றும் வார்னருக்கு இடையேயான மோதல், மெக்ராத் - சச்சின், ஆண்டர்சன்- காலீஸ் ஜோடிகளுக்கு இடையேயான மோதல் போல கிரிக்கெட் வரலாற்றில் உருவெடுக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ipl 2020 Jofra Archer
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe