Advertisment

கோலியின் பலவீனம் இதுதான், அவரை கண்டிப்பாக அவுட் ஆக்குவேன்- ஜோப்ரா ஆர்ச்சர்...

பல சர்ச்சைகளுக்கு நடுவே வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

jofra archer interview about worldcup

இதுகுறித்து பேட்டியளித்த ஆர்ச்சர் கூறுகையில், "இங்கு விளையாட வரும் வீரர்கள் சிலரை ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். எனவே அது நமக்கு சாதகமாக அமையும். அந்த வீரர்களின் பலம் பலவீனம் குறித்து அறிந்திருக்கிறோம். ஐபிஎல் மன அழுத்தம் நிறைந்த போட்டி. அதில் விளையாடியது தான் என்னை உலககோப்பைக்கு தயார்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன், ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை, ஒவ்வொரு முறையும் அவர் லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்தார்.

எனவே இந்த முறை அவரது விக்கெட்டை நான் எடுக்க வேண்டும். ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு வீச ஆசை, அது உலகக்கோப்பையில் சாத்தியமில்லை, எனவே கிறிஸ் கெய்ல் விக்கெட்டை வீழ்த்தவும் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் முதலில் தேர்ந்தெடுக்கப்படாத ஆர்ச்சர் ஐபிஎல் தொடரின் சிறந்த ஆட்டத்திற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

icc worldcup 2019 virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe