style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது இந்திய அணியின் சுழற்பந்து காம்போதான். அது நினைத்தபடி பலனளிக்க, அயர்லாந்து டி20, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் என இந்திய அணியின் ஸ்பின்னர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மென்களை மிரட்டினர்.
குறிப்பாக குல்தீப் யாதவ்வின் சைனாமேன் ஸ்பின்னிங் ஸ்டைல், இங்கிலாந்து வீரர்களை அதிகம் குழப்ப, அவரது பெஸ்ட் இந்தத் தொடரில் வெளியானது. ஆனால், கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஜோ ரூட் மற்றும் மோர்கன் இணை பந்தாடியது. இடைவிடாத ஃபீல்டு ஒர்க் செய்த இங்கிலாந்து அணி, குல்தீப் யாதவ்வை எதிர்கொள்ள மரிலீன் இயந்திரத்தைப் பயன்படுத்தியதாக ஜாஸ் பட்லர் கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில், இந்திய அணியை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் ப்ராட் தவிர்த்து, ஜோ ரூட் ஸ்பின் அட்டாக்கும் சோதனை செய்யும் என கூறப்படுகிறது.
Incredible bowling figures for @root66: 4️⃣ wickets for 5️⃣ runs!@YorkshireCCC win a thrilling Roses match by 118 runs
Videos & scorecards: https://t.co/t3dIeoj0Dbpic.twitter.com/yp80NRhLoF— County Championship (@CountyChamp) July 24, 2018
யோக்ஷிர் அணிக்காக களமிறங்கிய ஜோ ரூட், பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பவுலிங்கில் அசத்தினார். 7.4 ஓவர்கள் பந்துவீசிய அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்து ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இது லங்காஷிர் அணிக்கு பேரிடியாக இருந்ததோடு மட்டுமின்றி, 118 ரன்கள் வித்தியாசத்தில் யோக்ஷிர் அணி வெற்றிபெறவும் உதவியது குறிப்பிடத்தக்கது.