இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி, இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும்இந்தப் போட்டியில், டாஸ்வென்றஇங்கிலாந்து பேட்டிங்செய்தது.
இங்கிலாந்தின் தொடக்கஆட்டக்காரர்கள், முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள்சேர்த்தனர். இதன்பிறகு இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் ஜோரூட்டும், டொமினிக் சிபிலியும்சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடியஜோரூட், தனதுநூறாவதுடெஸ்டில் சதமடித்ததோடு புதிய சாதனையையும் படைத்தார். இதுவரை யாரும்98,99,100-வது டெஸ்ட் எனமூன்று போட்டிகளிலும் சதமடித்ததில்லை. தனதுகடைசிஇரண்டு டெஸ்ட்போட்டிகளிலும் சதமடித்த ஜோரூட், இப்போட்டியில் சதமடித்ததன் மூலம், 98,99,100-வது டெஸ்டுகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இங்கிலாந்து அணி 263ரன்களுக்கு இரண்டு விக்கெட்இழந்துநல்ல நிலையில் ஆடி வருகிறது. இந்தியத் தரப்பில் அஸ்வின், பும்ராஆகியோர்தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.