
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நடந்த முடிந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அதன்பிறகு அவருக்குத் திருமணம் நடைபெறப்போவதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவர் நடிகை அனுபமா பரமேஸ்வரனை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.
இதனை அனுபமாவின் தாயார் திட்டவட்டமாக மறுத்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த பிரபல விளையாட்டு தொகுப்பாளியான சஞ்சனா கணேசனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று (15.03.2021) இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ள பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதி, தங்களது வாழ்வில் மகிழ்ச்சியான நாட்களில் இந்தநாளும் ஒன்று எனத் தெரிவித்துள்ளனர்.