ADVERTISEMENT

சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பும்ரா!

01:10 PM Nov 06, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐபிஎல் வரலாற்றில் தனது சிறந்த பந்துவீச்சை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா பதிவு செய்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின், முதல் தகுதி சுற்றுப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், அபார வெற்றி பெற்ற மும்பை அணி முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது. டெல்லி அணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிரடியான தாக்குதலை வெளிப்படுத்திய பும்ரா, ஐபிஎல் வரலாற்றில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

நான்கு ஓவர்கள் பந்து வீசிய பும்ரா, ஒரு ஓவர் மெய்டன் செய்து, 14 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், நடப்புத் தொடரில் பும்ரா வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

இது ஒரு சீசனில் இந்திய வீரர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளின் எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT