Advertisment

"ஓய்வு பெறும்போது சூப்பர் ஸ்டாராக இருப்பார்..." இந்திய பந்துவீச்சாளர் குறித்து ஆஸி முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி பேச்சு!

Jason Gillespie

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடருக்காக முழுவீச்சுடன் ஆயத்தமாகி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர பந்துவீச்சாளருமான ஜேசன் கில்லெஸ்பி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "முன்னர் இருந்ததை விட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதற்காக கடந்த தொடரில் விளையாடிய வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்று அர்த்தம் இல்லை. தற்போது சிறப்பான வேகப்பந்துவீச்சு குழு அமைந்துள்ளது. பும்ரா சிறப்பாக விளையாடி வருகிறார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறும்போது பும்ரா சூப்பர் ஸ்டாராக இருப்பார். மூன்று தரப்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக அவர் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" எனக் கூறினார்.

Advertisment

Jason Gillespie jasprit bumrah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe