fghgfhgfh

Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இதில் 2 டி20 போட்டிகளும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளனர். இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்டிக் பாண்டியா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பாண்டியா காயத்திலிருந்து மீண்ட பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.