இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. நடந்துமுடிந்த இரு ஆட்டங்களில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்றைய ஆட்டநேரத்தில் இந்திய அணி வீரர் இசாந்த் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஆவேசமாகச் சண்டையிட்டனர். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த முகமது ஷமி ஓடி வந்து இருவரையும் பிரித்து சமாதானம் செய்து விலக்கிவிட்டு அழைத்துச் சென்றார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து இந்திய அணிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என பலதரப்பினரும் இதனை பார்த்து விமர்சித்து வருகின்றனர்.