Advertisment

பாதி இந்தியனாகிவிட்டேன் - ஓய்வை அறிவித்த ஏபிடி; உருகிய விராட் கோலி!

virat - abd

உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ், ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடிவந்தார். இந்தநிலையில், தற்போது திடீரென அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிஏபி டிவில்லியர்ஸ் பேசும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில் பேசும்ஏபி டிவில்லியர்ஸ், "நான் வாழ்நாள் முழுவதும் ஆர்சிபியனாக இருக்கப் போகிறேன்.ஆர்சிபியில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு குடும்பமாகிவிட்டனர். வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஆர்சிபியில் நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் உணர்வும், அன்பும் எப்போதும் தொடரும். நான் இப்போது பாதி இந்தியனாக மாறிவிட்டேன், அதற்காக பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisment

இதற்கிடையேஏபி டிவில்லியர்ஸின் ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி, நமது காலத்தின் சிறந்த வீரர் என்றும், தான் சந்தித்ததிலேயேமிகவும் உத்வேகம் தரும் நபர் என்றும்ஏபி டிவில்லியர்ஸைகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நீங்கள் செய்தவைக்காகவும், ஆர்சிபிக்கு வழங்கியவைக்காகவும் பெருமைப்படலாம் சகோதரா. நமது உறவு விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. அது எப்போதும் தொடரும்.இது என் இதயத்தைக் காயப்படுத்துகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் செய்வது போல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சிறந்த முடிவை எடுத்தீர்கள் எனக்குத் தெரியும்" எனக் கூறியுள்ளார்.

bangalore royal challengers AB DeVilliers virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe