Advertisment

“இந்திய அணிக்கு திரும்புவது நிச்சயம்; என் பயோபிக் இவர் தான் நடிக்கிறார்” - நடராஜன்  

“It is imperative to return to the Indian team; Natarajan is acting in my biopic

Advertisment

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி கண்டிப்பாக இந்தியாவிற்குள் வருவேன் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கூறியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் நடராஜ் சேலத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாரத்தான் என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவரும் ஓடலாம். மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ரன்னிங் தேவைப்படுகிறது.

சின்ன சின்ன கிராமங்களில் இருந்து அதிக விளையாட்டு வீரர்கள் உருவாகனும். நான் வந்தது போல் அதிகமானோர் உருவாகவேண்டும் என்பதே என் ஆசை. பெண்கள் அனைத்து துறைகளிலும் வந்து கொண்டுள்ளனர். இன்னும் நிறைய பெண்கள் நிறைய விஷயங்களில் சாதிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் கிராமத்தில் இருந்து அதிகமானோர் வருவார்கள்.

Advertisment

இனிவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என நினைக்கின்றேன். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி கண்டிப்பாக இந்தியாவிற்குள் வருவேன்.

என் பயோபிக் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அப்புறம் தான் எடுக்கவேண்டும் என சொல்லிக்கொண்டுள்ளேன். ஆனால் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கிறார்” எனக் கூறினார்.

Natarajan
இதையும் படியுங்கள்
Subscribe