Skip to main content

இஷாந்த் சர்மா 2.0

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

இந்தியா வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது பந்துவீச்சால் வங்கதேச வீரர்களை சிதறடித்தார் இஷாந்த் சர்மா. 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும், பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

 

ishanth sharma bowling figures in recent times

 

 

கடந்த சில வருடங்களாக மிகவும் அருமையாக பந்து வீசி வருகிறார் இஷாந்த் சர்மா. விராட் கோலிக்கு பக்கபலமாகவும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக வழிநடத்துகிறார் எனலாம். பொதுவாகவே இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாகவே இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய பந்து வீச்சில் அசத்தி வருகிறார். கடந்த 2018 ஆண்டு முதல் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இவர் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 19.79 ஆக இருந்தது. 2018 முன்பு இவரது சராசரி 36.55 ஆக இருந்தது, ஆனால் தற்போது 17 ரன்கள் வீதம் என்று இவரது சராசரி குறைந்துள்ளது. 2019 ஆண்டில் அது மேலும் குறைந்து 15.85 ஆக உள்ளது. தான் ஆடிய 13 வருடங்களில் இந்த வருடம் தான் குறைவான சராசரியை இவர் பதிவு செய்துள்ளார்.

இந்த முன்னேற்றத்திற்கான காரணத்தை கூறிய இஷாந்த் " தற்போது என்னுடைய ஆட்டத்தை ரசித்து கொண்டிருக்கிறேன். முன்னதாக என் மீது நானே அதிக அழுத்தம் போட்டுக்கொண்டிருந்தேன். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இருந்தது. களத்தில் விளையாடும்போது அதிகாமாக யோசிப்பேன். ஆனால் தற்போது அனுபவம் அதிகம் வந்ததால் சூழ்நிலையை புரிந்துகொண்டு பந்து வீசுகிறேன். அதனால் தான் தற்போது நன்கு பந்து வீசுகிறேன்" என்றார்.

வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ, இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சை புகழ்ந்துள்ளார். அவர் " இஷாந்த் சர்மாவின் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டும். தற்போது அவர் அபாரமாக பந்து வீசுகிறார். அவரை போல் எங்கள் வீரர்கள் பந்து வீச வேண்டும். மேலும், அவரை போல் நேரம் எடுத்து அனுபவங்களை பெறவேண்டும். அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் புஜாரா போன்ற வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவதால், சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி விளையாட்டை அணுக வேண்டும் என்று தெரிந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இஷாந்த் ஷர்மாவின் இந்த அபார வளர்ச்சி இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே நிதர்சனம். 

 

 

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

“போலீசை டார்லிங்னு கூப்பிட்ட போதை ஆசாமி” - நீதிமன்றம் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Kolkata court takes action Calling women 'darling' is a crime

கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக்ராம் என்பவர், பெண் போலீசாரை ‘டார்லிங்’ என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜானக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு வந்த போது ஜானக்ராமுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ஜானக்ராம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம்’ எனக் கூறினார். இதனையடுத்து, குற்றவாளியின் மூன்று மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.