team india

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில்முடிவடைந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இன்று (03.12.2021) தொடங்குகிறது.

Advertisment

இந்தநிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து மூன்று முக்கிய வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இடது சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இஷாந்த் ஷர்மாவும், வலது கை காயம் காரணமாக ஜடேஜாவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisment

அதேபோல், அணியின் துணை கேப்டன் ரஹானே தசைப்பிடிப்பு காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மைதானம் ஈரமாக இருப்பதால் டாஸ் போடுவது தள்ளிப்போயுள்ளது. 10.30 மணியளவில் நடுவர்கள் மைதானத்தை ஆய்வுசெய்த பிறகேடாஸ் போடுவது குறித்து தீர்மானிக்கவுள்ளனர்.

இதற்கிடையே காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப்பதிலாகடாம்லாதம்அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.