Advertisment

15.25 கோடிக்கு ஏலம் போன இஷான் கிஷன்.. 4 கோடிக்கு ஏலம் போன நடராஜன்!

ipl

Advertisment

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுப்பாக நடைப்பெற்ற ஏலம், ஏலத்தாரரான ஹக் எட்மீட்ஸ் மயங்கி விழுந்ததால், சிறிது நேரம் தடைப்பட்டு பின்னர் மாற்று ஏலத்தாரருடன் மீண்டும் தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், வனிந்து ஹசரங்காவை 10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலம் எடுத்தது. மிட்ச்ஷெல் மார்ஷை 6.50 கோடிக்கு டெல்லி அணியும், க்ருனால் பாண்டியாவை லக்னோ அணி 8.25 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தன. வாஷிங்டன் சுந்தரை ஹைதரபாத் அணி 8.75 கோடிக்கும், அம்பத்தி ராயுடுவை 6.75 கோடிக்கு சென்னை அணியும் ஏலம் எடுத்தன.

இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. பாரிஸ்டோவை பஞ்ஜாப் அணி 6.75 கோடிக்கும், தினேஷ் கார்த்திக்கை பெங்களூர் அணி 5.50 கோடிக்கும் ஏலம் எடுத்தன. நிக்கோல்ஸ் பூரானை ஹைதரபாத் அணி 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

Advertisment

தமிழக வீரர் நடராஜனை ஹைதரபாத் அணி 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. முகமது நபி, மேத்யு வேட், விருத்திமான் சஹா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

IPL
இதையும் படியுங்கள்
Subscribe