ஒருநாள் ஆட்டத்தில் டி20 ஆடிய வீரர் - மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!

ISHAN KISHAN

இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் இன்று (20.02.2021) தொடங்கின. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் சென்னை, சூரத், பெங்களூர், ஜெய்ப்பூர், இந்தூர், கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில்ஜார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும் மோதின.

இப்போட்டியில் டாஸ்வென்றமத்தியப் பிரதேசஅணி, பந்து வீச்சைதேர்வு செய்தது. இதனையடுத்து ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான்கிஷனும், உத்கர்ஷ் சிங்கும் களமிறங்கினர். உத்கர்ஷ் சிங்விரைவில் ஆட்டமிழந்தாலும், கேப்டன்இஷான்கிஷன்வழக்கம் போல் அதிரடியாக விளையாடி சதமடித்தார். சதத்திற்குப் பிறகும்அதிரடி கட்டியஇஷான்கிஷன், இரட்டை சதமடிப்பார் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், 173 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் வெறும் 94 பந்துகளில் 19 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 173 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில்அவரதுஸ்ட்ரைக் ரேட்184.04.

ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில்இஷான்கிஷனின் அதிரடி ஆட்டம், மும்பைரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகஅதிக ரன்கள்(516) அடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருட ஐ.பி.எல்லில்அதிக சிக்ஸர் அடித்த வீரரும்இவரேஆவார். அவர் கடந்த வருட ஐபிஎல்லில் 30 சிக்ஸர்கள் விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ipl 2021 Mumbai Indians
இதையும் படியுங்கள்
Subscribe