Advertisment

"2010 தோனி இன்றைய தோனியை சந்தித்தால்..." இர்பான் பதான் பேச்சு!

irfan pathan

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இத்தொடரில் சென்னை அணியின் செயல்பாடு குறித்தும், தோனியின் ஆட்டம் குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா என்று எழுந்த சந்தேகத்திற்கு சென்னை அணியின் சி.இ.ஓ. விளக்கமளித்தார். இந்த வருட ஐபிஎல் தொடரோடுதோனி ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்று பரவிய வதந்திக்கு தோனி பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தோனி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "2010-ல் விளையாடிய தோனி, 2020-ல் விளையாடும் இன்றைய தோனியை சந்திக்க நேர்ந்தால் என்ன கூறுவார் என்று யோசித்தேன். அப்படிச் சந்திக்க நேர்ந்தால், அடுத்த ஆண்டு முழு உடற்தகுதியோடும், ஆட்டத்திறனோடும் திரும்பி வாருங்கள் என்று கூறியிருப்பார். அதைதோனி செய்வார் என்பது உறுதி" எனக் கூறினார்.

Advertisment

Dhoni irfan pathan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe