Advertisment

எந்த ஐ.பி.எல் அணி யாரை விடுவித்தது? முழு விவரம்..

ipl

Advertisment

இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும்ஐபிஎல் திருவிழா, கரோனாதொற்று காரணமாககடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் இந்தியாவிலேயே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள ஏலத்துக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள், தங்கள் அணி வீரர்களை விடுத்துள்ளன. ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகிவுள்ளது.

நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்கா, குல்டர்நைல், பேட்டின்சன், மெக்லானகன், ரூதர்போர்ட், பல்வந் ராய், திக்விஜய் தேஷ்முக் ஆகியோரை விடுவித்துள்ளது.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முரளி விஜய், கேதார் ஜாதவ், மோனு சிங், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியூஸ் சாவ்லா ஆகியோரை விடுவித்துள்ளது.

Advertisment

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகிறிஸ் மோரிஸ், ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, இசுரு உதனா, டேல் ஸ்டெயின், சிவம் துபே , உமேஷ் யாதவ், பவன் நெகி, குர்கீரத் மான், பார்த்திவ் படேல் ஆகியோரை விடுவித்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சஞ்சய் யாதவ், பி சந்தீப், பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், பிருத்விராஜ் ஆகியோரை விடுவித்துள்ளது.

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி மேக்ஸ்வெல், கருண் நாயர், ஹார்டஸ் வில்ஜோன், ஜகதீஷா சுசித், முஜீப் உர் ரஹ்மான், ஷெல்டன் காட்ரெல், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்பா கவுதம், தாஜிந்தர் சிங் ஆகியோரை விடுவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எம் சித்தார்த், நிகில் நாயக், சித்தேஷ் லாட், கிறிஸ் கிரீன், டாம் பான்டன் ஆகியோரை விடுவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித், டாம் கரன், ஓஷேன் தாமஸ், அங்கித் ராஜ்பூத், வருண் ஆரோன், ஷாஷாங்க் சிங், அனிருத் ஜோஷி, ஆகாஷ் சிங் ஆகியோரை விடுவித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அலெக்ஸ் கேரி, கீமோ பால், சந்தீப் லாமிச்சேன், துஷார் தேஷ்பாண்டே, மோஹித் சர்மா ஆகியோரை விடுவித்துள்ளது.

Mumbai Indians CSK PLAYER released IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe