EDEN GARDEN

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் சுற்றும், இரண்டாவது தகுதிச் சுற்றும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் "பிளே ஆஃப்" என்னும் சுற்றுக்குள் வரும்.

ஐபிஎல் பதினோராவது தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடருக்கான எலிமினேட்டர் சுற்றும், இரண்டாவது தகுதிச்சுற்றும் மே 23 மற்றும் மே 25ஆம் தேதி புனே மைதானத்தில் நடப்பதாக இருந்தது. தற்போது அதனை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்க இருந்த போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கின்றன. இங்கு கூடுதலாக நடக்கவிருந்த பிளே ஆஃப் சுற்றுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. புனே மைதானத்தில் சுமார் 32,000 பேர் வரை அமரலாம், கொல்கத்தாவில் இதை விட இரண்டு மடங்குரசிகர்கள் அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.