Advertisment

புல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு...

tfhfhtfh

Advertisment

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், அதன் தொடக்க விழா நடைபெறாது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்க விழாவில் வருண் தவான், ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் நடனமும், கண்கவர் வாணவேடிக்கைகளும் நடத்தப்பட்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் தொடர். இதற்காக பல கோடிகள் செலவழிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்க விழா நடத்தாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க போவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

ipl2019 IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe