ipl match sun risers hyderabad vs delhi capitals teams

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நாளை (10/11/2020) நடக்கும் இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 78, ஹெட்மயர் 42, ஸ்டாய்னிஸ் 38, ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்கள் எடுத்தனர்.

Advertisment

ipl match sun risers hyderabad vs delhi capitals teams

பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. நான்கு முறை கோப்பை வென்றுள்ள மும்பை இண்டியன்ஸ் அணியும் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நாளை (10/11/2020) மோதுகிறது.