ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குச்செல்லும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் தோற்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் விளையாடும். ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பெங்களூரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளன.