ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.
துபாயில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களில் சுருண்டது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்தில் 7 சிக்ஸர் அடித்து 132 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.