/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kings33.jpg)
ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kings (3).jpg)
ஷார்ஜாவில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி பந்து வரை போராடி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 61, கிறிஸ் கெயில் 53, மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)