Advertisment

அசராத பஞ்சாப் அணியை அசைக்குமா டெல்லி? - ஐ.பி.எல். போட்டி #22

ஐ.பி.எல். சீசன் 11ன் 22ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Advertisment

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் இந்தப் போட்டி, டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வைத்து இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்திலேயே, பஞ்சாப் அணி மிக எளிதாக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆக, லீக் ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் மோதும் கடைசி போட்டி இதுவாகும்.

இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியே கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இதுரை இந்த இரண்டு அணிகள் சந்தித்த 21 போட்டிகளில் 9 - 12 என்ற கணக்கில் டெல்லி அணி பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அதேபோல், பெரோஷா கோட்லா மைதானத்தில் 5 - 4 என்ற கணக்கில் டெல்லி அணி முதன்மை வகித்தாலும், பெரியளவில் மாற்றங்கள்ஏதும்இருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக, இந்த இரண்டு அணிகளும் மோதிய முதல் போட்டியில், பஞ்சாப் அணியின் தொடக்கவீரர் கே.எல்.ராகுல் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து ஐ.பி.எல். வரலாற்றுச் சாதனை படைத்தார். இன்றைய போட்டியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தொடக்க வீரர்களின் வரிசையில் இறங்கும்கிறிஸ் கெயிலும் போதுமான சேதாரத்தை டெல்லிஅணியின் பவுலர்கள் மீது ஏற்படுத்த முடியுமெனில், மிக சொதப்பலான தொடக்கத்தைத் தரும் டெல்லி அணிக்கு சிக்கலே மிஞ்சும். அதேசமயம், அனுபவம் வாய்ந்த தலைமை, திறமையான பந்துவீச்சு என கிடைத்திருக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தினால், அசராத பஞ்சாப் அணியை டெல்லி அணி நிச்சயம் அசைக்கலாம்.

ipl 2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe