ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. மும்பை இண்டியன்ஸ் அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 79, ரோஹித் சர்மா 35, ஹர்தீக் பாண்டியா 30 ரன்கள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
அபுதாபியில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.